இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.46 சதவீதமாக குறைவு: 1 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயம்…!!

23 November 2020, 11:26 am
corona death updatenews360
Quick Share

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படும் இறப்பு விகிதம் 1.46 சதவீதமாக ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இறப்பு விகிதம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 1.46 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா காரணமாக ஏற்பட்ட முதல் மரணம் 2020 மார்ச் 12 அன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால், இந்திய அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை நெருங்கி வருகிறது.

நாட்டில் பொதுவான காய்ச்சல் காரணமாக ஆண்டுதோறும் நிகழும் இறப்புகளின் எண்ணிக்கையை மனதில் கொண்டு அரசாங்கம் இறப்பு விகிதத்தை 1 சதவீதமாக இலக்கு நிர்ணயித்து உள்ளது. நாடு முழுவதும் இருந்து அதிகபட்ச எண்ணிக்கையிலான இறப்புகளை பத்து மாநிலங்கள் பதிவு செய்து உள்ளன.

மோசமாக பாதிக்கப்பட்டமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், டெல்லி அதிகபட்சமாக புதிய இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, கொரோனா காரணமாக 121 இறப்புகள் டெல்லியில் பதிவாகியுள்ளன, வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,391 ஆக உள்ளது. இது நாடு முழுவதும் இருந்து பதிவான மொத்த புதிய இறப்புகளில் 22 சதவீதத்திற்க்கும் அதிகமாக உள்ளது.

அதிக கொரோனா இறப்புகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களின் வரிசையில் மராட்டியம், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Views: - 16

0

0