இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா இறப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்…!!

27 October 2020, 5:41 pm
inida winter corona- updatenews360
Quick Share

இந்தியாவில் கடந்த 5 வாரங்களாக கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது நல்ல அறிகுறி என தெரிவித்துள்ளார்.

தற்போது சிசிச்சை பெற்று வருபவர்களில் 78% பேர், 10 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் குணமடைந்தவர்களின் விகிதம் 90.62 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பண்டிகை காலங்களில் கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

Views: - 19

0

0