விவசாயிகள் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன..? டிராக்டர் பேரணிக்கு பின்பே முடிவு..! வேளாண் அமைப்புகள் திட்டவட்டம்..!

24 January 2021, 10:32 am
tractor_parade_updatenews360
Quick Share

மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தலைவர்கள் நேற்று தங்களின் கூட்டத்திற்குப் பின் தெரிவித்தனர்.

மேலும் அவர்களின் உடனடி கவனம் ஜனவரி 26 டிராக்டர் அணிவகுப்பில் மட்டுமே உள்ளது எனத் தெரிவித்தனர். டிராக்டர் அணிவகுப்புக்குப் பிறகுதான் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று வேளாண் சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர். 

முன்னதாக, 18 மாதங்களுக்கு சட்டங்களை நிறுத்தி வைப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை மறுபரிசீலனை செய்வதற்காக வேளாண் சங்கத் தலைவர்கள் நேற்று ஒரு கூட்டத்தை நடத்தினர்.

ஆனால் நேற்றைய வேளாண் அமைப்புகளுக்கிடையேயான கூட்டத்தில் எந்தவொரு ஒருமித்த கருத்தையும் எட்ட முடியவில்லை.
வெள்ளிக்கிழமை மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், சட்டங்களை இடைநிறுத்துவதற்கான மத்திய அரசின் முன்மொழிவுக்கு அவர்கள் ஒப்புக் கொண்டால், நேற்றைக்குள் விவசாயிகள் தலைவர்கள் முடிவைத் தெரிவிக்குமாறு அரசாங்கம் கேட்ட ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“எங்கள் போராட்டத்தின் தொடக்கத்திலிருந்து, எங்கள் கோரிக்கை மிகவும் தெளிவாக உள்ளது. இந்த மூன்று சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதை விட குறைவான எதுவும் எங்களுக்கு வேண்டாம்.” என்று ஹரியான பாரதிய கிசான் யூனியன் தலைவர் குர்ணம் சிங் சாதுனி கூறினார்.

வேளாண் சங்கங்கள் தற்போது தங்களது முன்மொழியப்பட்ட ஜனவரி 26 டிராக்டர் அணிவகுப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும், குடியரசு தினத்திற்குப் பிறகு, அடுத்த நடவடிக்கை குறித்து அவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்திற்கும் வேளாண் சங்கத் தலைவர்களுக்கும் இடையிலான கடைசி 10 சுற்று பேச்சுவார்த்தைகளைப் போலல்லாமல், வெள்ளிக்கிழமை நடந்த 11’வது சுற்றில் இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாடுகளை கடுமையாக்கினர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி கூட அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0