திருப்பதியில் தினசரி தரிசன எண்ணிக்கையை குறைக்க முடிவு : கொரோனா அச்சுறுத்தலால் தேவஸ்தானம் திட்டம்!!

18 April 2021, 2:53 pm
tirupati Temple -Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை 30 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக குறைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதன் காரணமாக மே மாதம் முதல் ஏழுமலையான் பக்தர்களுக்கு வழங்கப்படும் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் எண்ணிக்கையை தினமும் 30 ஆயிரத்திலிருந்து 15,000 ஆக குறைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை.

இம்மாதம் 20 ஆம் தேதி மே மாதம் ஏழுமலையான் தரிசனத்திற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆன்-லைனில் வெளியிடப்படும். கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் கடந்த 13ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 30

0

0