கேரளாவில் குறையும் கொரோனா; இன்று 26,729 பேருக்கு தொற்று உறுதி

Author: kavin kumar
6 February 2022, 10:19 pm
Quick Share

கேரளாவில் ஒரே நாளில் 26,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிற மாநிலங்களில் கொரோனா மூன்றாம் அலை குறைந்துவந்த நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தது. இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் 50 சதவிகிதத்துக்கும் மேல் கேரள மாநிலத்தில் பதிவானது. சில சமயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதி கொரோனா பாதிப்பு கேரளத்தில் பதிவானது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று குறைந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 26,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பு நோற்றைய விட சற்று குறைவான பாதிப்பு ஆகும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 3,989 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 3,564 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 58,255 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 58,83,023 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 49,261 குணமடைந்தனர்.

Views: - 1141

0

0