எஸ்சிஓ கூட்டத்தில் கலந்து கொள்ள ரஷ்யா புறப்பட்டார் ராஜ்நாத் சிங்..! சீன அமைச்சருடன் சந்திப்பு நடக்குமா..?

2 September 2020, 1:49 pm
Rajnath_Singh_UpdateNews360
Quick Share

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு புறப்பட்டார். இந்த பயணத்தில் ராஜ்நாத் சிங் தனது சீனப் பிரதிநிதியுடனான சந்திப்பு பற்றி அவரது பயண அட்டவணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் இருவரான இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை மோதல் அதிகரித்து வரும் நேரத்தில் எஸ்சிஓ சந்திப்பு நடைபெறுகிறது. ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு மந்திரி ஜெனரல் வீ ஃபெங்கே இடையே இருதரப்பு சந்திப்புக்கு எந்த திட்டமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஆகஸ்ட் 30’ஆம் தேதி நடந்த சீன ஆக்கிரமிப்பு நடவடிக்கை குறித்து இந்தியாவும் சீனாவும் இன்று மூன்றாவது நாளாக பிரிகேட் கமாண்டர்-லெவல் பேச்சுவார்த்தையைத் தொடர்கிறது. இராணுவ பேச்சுவார்த்தை காலை 10 மணிக்கு சுஷுல்-மோல்டோவில் நடைபெறும் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

பல கொள்முதல் திட்டங்களை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோயுக் மற்றும் பல உயர் இராணுவ அதிகாரிகளுடன் சிங் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் பலதரப்பு போர்ப் பயிற்சியில் சீன மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் கலந்து கொள்வதால் இந்தியா விலகியது குறிப்பிடத்தக்கது.

ராஜ்நாத் சிங் பயணம் முடிந்த பிறகு, செப்டம்பர் 10’ம் தேதி நடைபெறும் எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் அழைக்கப்பட்டுள்ளார்.

Views: - 10

0

0