பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட டிஆர்டிஓ விஞ்ஞானி..! சதிச்செயலில் ஈடுபட்ட பிக்பாஸ் போட்டியாளர்..!
29 September 2020, 11:36 amஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 35 வயதான விஞ்ஞானி ஒரு பிக் பாஸ் போட்டியாளர் உட்பட ஐந்து நபர்களால் நொய்டாவில் உள்ள ஒரு ஹோட்டலில் விஞ்ஞானி ஒருவர் பிணைக் கைதியாக வைக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவரை விடுவிக்க கும்பல் ரூ 10 லட்சம் கோரியது.
விஞ்ஞானி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உடன் தொடர்புடையவர் என்று போலீசார் தெரிவித்தனர். அவர் ஒரு நாள் முழுவதும் ஓயோ ஹோட்டலில் பிணைக் கைதியாக வைக்கப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட பெண் சுனிதா குர்ஜார் அல்லது பாப்லி என கூறப்படுகிறது. அந்த பெண் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதாக, நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான சல்மான் கானுடன் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் காட்டியுள்ளார்.
தான் பிக் பாஸ் சீசன் 10 வெற்றியாளர் மன்வீர் குர்ஜரின் உறவினர் என்றும் அந்த பெண் கூறினார்.
நொய்டா செக்டர் 41’இல் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சுனிதா மற்றும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய மற்ற இரண்டு குற்றவாளிகளையும் தேடுவதாக போலீசார் கூறுகின்றனர்.
மசாஜ் சேவையை வழங்குவதாகக் கூறிக்கொண்டு இந்த கும்பல் மக்களைக் கொள்ளையடித்தது. இதுபோன்ற இரண்டாவது கும்பல் போலீசாரால் தற்போது முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிஆர்டிஓ விஞ்ஞானி வலையில் விழுந்தது எப்படி?
நொய்டாவில் செக்டர் 74’இல் வசிக்கும் விஞ்ஞானி, சுனிதாவுடன் தொடர்பு கொள்ளும்போது மசாஜ் பார்லர்களைத் தேடிக்கொண்டிருந்தார். அவர் பார்லர் எண்ணை அழைத்தபோது, அவரை லாஜிக்ஸ் சிட்டி சென்டருக்கு வரச் சொன்னார்.
பாதிக்கப்பட்டவர் அந்த இடத்தை அடைந்ததும், அவரை ஓயோவால் நிர்வகிக்கப்படும் குணால் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ஒரு அறையில் பிணைக் கைதியாக வைத்திருந்தனர். பின்னர், கடத்தல்காரர்கள் அவரது மனைவியை அழைத்து ரூ 10 லட்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
அந்த நபரின் மனைவி பின்னர் போலீசை அணுகினார். அவர் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய ஒரு குழுவை அமைத்தார். பின்னர் அந்தப் பெண் பணத்துடன் ஹோட்டலுக்கு அனுப்பப்பட்டார்.
“மூன்று ஆண்கள் ஹோட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் பையை எடுக்க வந்தார்கள். மூன்றாவது நபர் பிடிபட்டபோது இரண்டு ஆண்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் மீட்கப்பட்டார்” என்று டிசிபி ரன்விஜய் சிங் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட பெண் சுனிதா மற்றும் ஹோட்டல் மேலாளர் ராகேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.