ஐஐடி ரூர்க்கியில் 88 மாணவர்களுக்கு கொரோனா..! ஐந்து விடுதிகளை சீல் வைத்த சுகாதாரத்துறை..!
8 April 2021, 3:37 pmஉத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தின் ரூர்க்கியில் உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி) 88 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
ஐஐடி ரூர்க்கியின் செய்தித் தொடர்பாளர் சோனிகா ஷிரிவஸ்த்வா கூறுகையில், அனைத்து 88 மாணவர்களும் ஐ.ஐ.டி வளாகத்திற்குள் உள்ள கங்கா ஹாஸ்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இது சிறப்பு கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது.
“இந்த மாணவர்கள் ஹரித்வார் மருத்துவ அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று ஸ்ரீவாஸ்த்வா மேலும் கூறினார். கிட்டத்தட்ட ஐந்து விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஐஐடி ரூர்க்கியின் ஆன்லைன் வகுப்புகளில் எந்த இடையூறும் இல்லை என்று அவர் கூறினார்.
ஐஐடி ரூர்க்கி மாநில அரசின் அனைத்து கொரோனா வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக கடைபிடிப்பதாக ஸ்ரீவாஸ்தவா தெளிவுபடுத்தினார். “நாங்கள் கொரோனா வழிகாட்டுதல்களில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறோம்.” என்று அவர் கூறினார்.
சமீபத்தில், நாடு முழுவதும் பல ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் அதிக அளவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0