டெல்லியில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..! உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!
6 August 2020, 7:28 pmடெல்லியில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை டெல்லியின் புறநகர்ப் பகுதியில் நடந்தது.
மாலை 5.30 மணியளவில், அக்கம்பக்கத்தினர் சிறுமியை அவரது வீட்டின் பால்கனியில் ரத்த வெள்ளத்தில் கண்டுள்ளனர்.
இதையடுத்ததுக்கு உடனடியாக சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்ததாகவும், தலையிலும் முகத்திலும் ஐந்து மற்றும் ஆறு தடவைகளுக்கு மேல் கனமான மற்றும் கூர்மையான பொருளால் தாக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அவர் அருகிலுள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது தலை, முகம், கால்கள் மற்றும் அடிவயிற்றில் ஏற்பட்ட காயங்களின் இரத்தம் மற்றும் தன்மையைப் பார்த்த கிளினிக்கின் மருத்துவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என பரிந்துரைத்தனர்.
பின்னர் சிறுமி சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததை உறுதிப்படுத்தினர். அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிசிச்சை வழங்கப்பட்டு நள்ளிரவில் எய்ம்ஸுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இது தொடர்பாக டெல்லி புறநகர் உதவி காவல் ஆணையர், “செவ்வாய்க்கிழமை மாலை 5.40 மணிக்கு ஒரு பாலியல் வன்கொடுமை குறித்து எங்களுக்கு அழைப்பு வந்தது. கொலை முயற்சி மற்றும் போக்ஸோ சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவரின் பரிசோதனையின் அடிப்படையில், போக்ஸோ சட்டத்தின் பிரிவு 8 (பாலியல் வன்கொடுமை) எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டது. கற்பழிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக டெல்லி போலீஸ் வட்டாரங்களில் கிடைத்துள்ள தகவல்களின் மூலம், ஒரு பெண் சிறுமியைப் பார்த்து உதவிக்காக கூச்சலிட்டார். ஆம்புலன்ஸ் வந்த நேரத்தில், அவர் மயக்கமடைந்தார். இதற்கிடையில், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், தங்கள் மூத்த மகளுடன், பணியில் இருந்ததாகவும், சிறுமி வீட்டில் தனியாக இருந்ததாகவும் தெரிகிறது.
இந்த சம்பவம் பிற்பகலில் நடந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்தவராக இருக்க வாய்ப்புகள் அதிகம் என சந்தேகிக்கப்படுகிறது.
“வெளியாட்கள் உள்ளே நுழைந்ததற்கான எந்த அறிகுறிகளையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. வெளியில் ஒரு சி.சி.டி.வியிலிருந்து கிடைத்த காட்சிகளும் குற்றம் சாட்டப்பட்டவரின் அறிகுறிகளைக் காட்டவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் எல்லோரும் சென்ற பிறகு வீட்டிற்குச் சென்ற ஒரு அறிமுகமானவராக இருக்கலாம்” என்று போலீசார் தெரிவித்தனர்.
சிறுமி தனது குடும்பத்தினருடன் ஒரு சிறிய குடியிருப்பில் வசித்து வருகிறார். அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரி அருகிலுள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள்.
ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, “சிறுமிக்கு சுயநினைவு திரும்பிய பிறகு அவரது அறிக்கை பதிவு செய்யப்படும். சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு யாரும் நுழைவதை அல்லது வெளியேறுவதை அக்கம்பக்கத்தினர் பார்க்கவில்லை.” எனத் தெரிவித்தார்.
எய்ம்ஸ் வட்டாரங்கள் கூறுகையில், சிறுமி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், வென்டிலேட்டர் ஆதரவில் மூச்சு விடுவதாகவும் கூறினர். டாக்டர்கள் இரண்டு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், டெல்லி பெண்கள் ஆணையம் இந்த வழக்கை தானாக முன் வந்து எடுத்துள்ளதுடன், டெல்லி உதவி கமிஷனரிடம், இந்த வழக்கில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டுள்ளது.
0
0