செவிலியர் சங்கத் தலைவர் சஸ்பெண்ட்: டெல்லி எய்ம்ஸ் செவிலியர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்..!!

Author: Rajesh
26 April 2022, 8:31 am
AIIMS_Delhi_Updatenews360
Quick Share

புதுடெல்லி: மருத்துவமனையின் செவிலியர் சங்கத்தின் தலைவருமான கஜ்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து செவிலியர்கள் அனைவரும் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், பணியாளர் பற்றாக்குறை உள்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து சனிக்கிழமையன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

செவிலியர்கள் சங்கத்தினர் நடத்திய போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காகவும், டாக்டர்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும் செவிலியர் சங்கத்தின் தலைவருமான ஹரிஷ் குமார் கஜ்லா பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த சனிக்கிழமையன்று ஆபரேஷன் தியேட்டரில், பணியாளர் பற்றாக்குறை குறித்து செவிலியர்கள் குழு நடத்திய போராட்டத்தின் விளைவாக குறைந்தது 50 திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டன. இதனை அடுத்து, ஹரிஷ் குமார் கஜ்லா நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

எய்ம்ஸ் நர்சிங் அதிகாரியும், மருத்துவமனையின் செவிலியர் சங்கத்தின் தலைவருமான ஹரிஷ் கஜ்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து செவிலியர்கள் அனைவரும் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

Views: - 818

0

0