மீன் குழம்பில் விஷம் வைத்து மனைவியின் குடும்பத்தை கொல்ல முயற்சி..! சிக்கிய டெல்லி தொழிலதிபர்..!

25 March 2021, 6:48 pm
varun_arora_updatenews360
Quick Share

டெல்லியில் மீன் குழம்பில் தாலியம் எனும் கடுமையான விஷத்தைக் கலந்து தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்திற்கு கொடுத்து, மாமியார் மற்றும் மைத்துனியைக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.

37 வயதான வருண் அரோரா அரசியல் எதிரிகளை ஒழிக்க மெதுவான விஷமான தாலியம் பயன்படுத்தத் தெரிந்த, ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனால் ஈர்க்கப்பட்டு இதை செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த கொலைகள் தொடர்பான விசாரணையில் அவர் தனது மனைவி மற்றும் மாமியார் ஆகியோருக்கு வழங்கிய உணவு விஷம் என்று தெரியவந்ததை அடுத்து வருண் அரோரா தெற்கு டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷில் உள்ள அவரது வீட்டில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

மனைவி மற்றும் அவரது குடும்பத்தால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக அவர் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

அரோராவின் மாமியார் அனிதா தேவி சர்மாவின் மரணம் குறித்த தடயவியல் அறிக்கை தாலியத்தின் தடயங்களை வெளிப்படுத்தியதை அடுத்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். அவரது மனைவியும் அவரது இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையின் தடயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது விரைவில் வெளிப்பட்டது.

“மேலதிக விசாரணையின்போது, ​​இறந்த அனிதாவின் இளைய மகள், பிரியங்காவும் கபூர் மருத்துவமனையில் சிகிச்சையின் போது 15.02.2021 அன்று மரணமடைந்தார் என்பது தெரியவந்தது. இது குறித்த விசாரணையின் போது, ​​அவர் புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பில் வந்தார். 

தேவேந்தர் மோகன் சர்மாவிடமும் (மாமனார்) தாலியம் விஷத்தின் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.மேலும் விசாரணையில் அவர்களது வீட்டில் பணிப்பெண்ணும் இதே போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றிருப்பது தெரியவந்தது.” என்று துணை போலீஸ் கமிஷனர் ஊர்விஜா கோயல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அனைத்தும் விஷத்தை சுட்டிக்காட்டியதை அடுத்து காவல்துறையினர், தடயவியல் குழுவை குடும்பத்தின் வீட்டிற்கு அனுப்பி சோதனை செய்ததில், தாலியத்தைக் கண்டுபிடித்தனர்.

விசாரணையின் போது, ​​அரோரா ஜனவரி மாத இறுதியில் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு மீன் குழம்பை சாப்பிட கொடுத்திருப்பதை போலீஸ் குழு கண்டறிந்தது. தொடர்ந்து விசாரித்த பின்னர், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

“வருண் அரோரா தாலியம் வாங்கியதாக ஒப்புக் கொண்டார். மேலும் அதை அனிதா (மாமியார்), திவ்யா (மனைவி), தேவேந்தர் மோகன் (மாமியார்) மற்றும் பிரியங்கா (மைத்துனி) ஆகியோருக்கு வழங்கியதாகக் கூறினார். நீண்ட காலமாக அவர்களால் அவமானத்திற்கு ஆளானதற்கு பழிவாங்கும் விதமாக இதைச் செய்துள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட வருண் அரோராவின் வீட்டில் தாலியம் கண்டறியப்பட்டது.” என்று காவல்துறையின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

அரோராவின் மொபைல் போனிலும் தாலியம் வாங்குவது பற்றிய தகவல்கள் இருந்தன.

Views: - 40

0

0