இடைவிடாத கனமழை…! இடிந்து விழுந்த முதலமைச்சர் வீட்டின் மேற்கூரை…! பதறிய அதிகாரிகள்

7 August 2020, 8:01 pm
Quick Share

டெல்லி: கனமழை காரணமாக, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

கெஜ்ரிவாலின் வீடு சிவில் லைன்ஸ், பிளாஸ் ஸ்டாப் சாலையில் உள்ளது. சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, அவரது வீட்டின் ஒரு அறையில் உள்ள மேற்கூரை இடிந்தது.

கூரை இடிந்த போது, அங்கு யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. அந்த அறையின் அருகில் இருந்த கழிப்பறையின் மேற்கூரையும் இடிந்து விழுந்து இருக்கிறது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி, விரைவில் அறிக்கை தயார் செய்வர். அதன்பிறகே, சீரமைப்பு பணிகள் தொடங்கும்.

கெஜ்ரிவால் இப்போது இருக்கும் இந்த வீடு 1942ம் ஆண்டு கட்டப்பட்டது.  2015ம் ஆண்டில், முதலமைச்சராக 2வது முறையாக பதவியேற்ற போது இந்த வீட்டில் கெஜ்ரிவால் குடியேறினார்.  முதல்முறையாக முதலமைச்சரான போது, திலக் லேனில் உள்ள 3 படுக்கை அறைகள் கொண்டு வீடு தரப்பட்டு இருந்தது.

Views: - 0 View

0

0