பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் வழக்கில் அரிஸ் கானுக்கு மரண தண்டனை விதிப்பு..! டெல்லி நீதிமன்றம் அதிரடி..!

15 March 2021, 6:01 pm
batla_house_encounter_ariz_khan_updatenews360
Quick Share

2008’ஆம் ஆண்டு பட்லா ஹவுஸ் என்கவுண்டர் தொடர்பாக அரிஸ் கான் குற்றவாளி என கடந்த வாரம் அறிவித்திருந்த டெல்லி நீதிமன்றம் இன்று தண்டனை விவரங்களை வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம், இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் ஷர்மாவின் மரணத்தில் இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதி அரிஸ் கான் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

முன்னதாக அரிஸ் கானுக்கு மரண தண்டனை விதிக்க காவல்துறையினர் கோரியிருந்தனர். “இது ஒரு வழக்கமான கொலையல்ல, நீதியைப் பாதுகாக்கும் ஒரு சட்ட அமலாக்க அதிகாரியின் கொலை. எனவே ஒரு முன்மாதிரியாக இருக்கும் வகையில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.” என காவல்துறை சார்பாக ஆஜரான கூடுதல் அரசு வக்கீல் ஏ.டி.அன்சாரி நீதிமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார்.

அதே சமயம் அரிஸ் கானுக்காக ஆஜரான வழக்கறிஞர் மரண தண்டனையை எதிர்த்தார்.

மார்ச் 8’ஆம் தேதி நீதிமன்றம் அரிஸ் கானும் அவரது கூட்டாளிகளும் போலீஸ் அதிகாரியைக் கொலை செய்தார்கள் என்பதையும், போலீஸ் அதிகாரி மீது துப்பாக்கியால் சுட்டதையும் முறையாக நிரூபித்தது” என்று கூறியிருந்தது.

தெற்கு டெல்லியில் ஜாமியா நகரில் 2008’ஆம் ஆண்டு நடந்த பாட்லா ஹவுஸ் மோதலின் போது காவல்துறையின் சிறப்பு பிரிவின் இன்ஸ்பெக்டர் சர்மா கொல்லப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதி ஷாஜாத் அகமதுவுக்கு 2013 ஜூலை மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே அரிஸ் கான் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளி என்று அறிவித்து தேடப்பட்டு வந்தார். அவர் பிப்ரவரி 14, 2018 அன்று கைது செய்யப்பட்டு, விசாரணையை எதிர்கொண்டார்.

இந்நிலையில் தற்போது அவருக்கு டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

Views: - 7

0

0