டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள்..! ஏப்ரல் 17க்கு பிறகு மீண்டும் 20 சதவீதத்திற்கு கீழே வந்த நேர்மறை விகிதம்..!

11 May 2021, 8:30 am
Corona_Test_UpdateNews360
Quick Share

டெல்லியில் இன்று 12,651 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம், தேசிய தலைநகரில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 13.36 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 19,663 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய புல்லட்டின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 319 இறப்புகள் பதிவாகியுள்ளன.

டெல்லி அரசு வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 66,234 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் 19.10 சதவீதமாக கொரோனா நேர்மறை விகிதம் உள்ளது. கடந்த ஏப்ரல் 16 முதல் இது தான் மிகக் குறைவான ஒன்றாகும்.

டெல்லியில் நேர்மறை விகிதம் ஏப்ரல் 17 முதல் 20 சதவீதத்தை விட அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது நேற்று ஞாயிற்றுக்கிழமை 21.67 சதவீதமாகவும், சனிக்கிழமை 23.34 சதவீதமாகவும், வெள்ளிக்கிழமை 24.92 சதவீதமாகவும், வியாழக்கிழமை 24.29 சதவீதமாகவும், புதன்கிழமை 26.37 சதவீதமாகவும், செவ்வாயன்று 26.73 சதவீதமாகவும், கடந்த திங்கட்கிழமை 29.56 சதவீதமாகவும் இருந்தது.

ஏப்ரல் 22 அன்று, நேர்மறை விகிதம் மிக அதிகபட்சமாக 36.2 சதவீதமாக இருந்தது.

மேலும் டெல்லியில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,36,218 ஆக உள்ளது. இதில் 12,31,297 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 85,258 ஆகும். இதில் 52,451 பேர் வீட்டில் தனிமையில் உள்ளனர்.

Views: - 118

0

0