டெல்லி சிறுமி பாலியல் வன்முறை..! குற்றவாளி கைது..! தொடர் குற்றங்களில் ஈடுபட்டது அம்பலம்..!

8 August 2020, 2:34 pm
Krishan_Delhi_Minor_Sexual_Assault_UpdateNews360
Quick Share

டெல்லியின் பீராகர்ஹியில் உள்ள தனது வீட்டிற்குள் 12 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்யப்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட க்ரிஷன் என்ற 33 வயதான நபர், ற்கனவே பல குற்றங்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த காலத்திலும் இதேபோன்ற வன்முறை சம்பவத்தில் கிருஷன் ஈடுபட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. 2006’ல் சுல்தான்புரியில் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஒரு பெண்ணைத் தாக்கினார். இந்த சம்பவத்தில் அந்த பெண் இறந்துவிட்டார். அதே ஆண்டு, அவர் தனது வீட்டிலிருந்து திருடிப் பிடிபட்டபோது தனது சகோதரனைக் கொல்ல முயன்றார்.

இந்த வழக்குகளில் குற்றம் உறுதி செய்யப்பட்டு சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட 12 வயது சிறுமியின் நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது. மேலும் அவர் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சையில் உள்ளார் என்று எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லி எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி வியாழக்கிழமை இரவு மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைக்காக ஐ.சி.யு’விற்கு மாற்றப்பட்டார்.

சம்பவம் நடந்த ஆகஸ்ட் 4’ம் தேதி, சிறுமி தனது மேற்கு டெல்லி வீட்டில் உடல் ரீதியாக தாக்கப்பட்டார் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர், அவரை முகத்திலும் தலையிலும் கூர்மையான பொருளால் தாக்கியுள்ளார்.

சிறுமியின் மலக்குடல் மற்றும் குடல்கள் பலத்த காயமடைந்தன. இதற்காக சிறுமிக்கு உடனடி அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டது. அதனால்தான் அவர் மருத்துவமனையை அடைந்தவுடனேயே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று எய்ம்ஸின் மூத்த மருத்துவர் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது அவர் கொள்ளையில் ஈடுபடும் நோக்கத்துடன் மட்டுமே சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறினார். வீட்டின் கதவு ஓரளவு திறந்த நிலையில் அவர் உள்ளே நுழைந்து ஒரு சூட்கேஸை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும்போது, சிறுமி அவரைப் பார்த்து கூச்சல் போட்டுள்ளார்.

இதையடுத்து குற்றவாளி சிறுமியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக மேலதிக விசாரணை நடந்து வருகிறது.

பாசிம் விஹார் மேற்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 0

0

0