டெல்லி-மும்பை 8 வழிச்சாலை..! இந்தியாவின் நீளமான அதிவேக பசுமைவழிச்சாலை.! 2024’க்குள் நிறைவேற்ற இலக்கு..!
15 August 2020, 11:59 pmQuick Share
டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலை இந்தியாவில் அடுத்து வரவிருக்கும் பசுமைவழிச்சாலை அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது 2024’க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் பாரத்மாலா பரியோஜ்னா கட்டம் -1 திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
டெல்லி-மும்பை பசுமை வழி அதிவேக நெடுஞ்சாலையின் நிதி, கட்டுமானம் மற்றும் செயல்பாட்டிற்காக டி.எம்.இ டெவலப்மென்ட் என்ற சிறப்பு நோக்கத்திற்கான நிதி தொகுப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்கியுள்ளது.
டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலையின் முக்கிய அம்சங்கள் :
- டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலை வரவிருக்கும் பசுமை தனிவழிப்பாதைகளில் ஒன்றாகும். இது மார்ச் 2024’க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- டெல்லி-மும்பை அதிவேக பசுமைவழி நெடுஞ்சாலையின் நீளம் 1200 கி.மீ. ஆகும்.
- இது 8 வழிச்சாலையாக இருக்கும் இருக்கும். எதிர்காலத்தில் தேவைப்பட்டால் 12 வழிச்சாலையாக விரிவுபடுத்திக் கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
- மிக நீளமான அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒன்றாக இருக்க, தனிவழியில் ஒரு மணி நேரத்திற்கு 120 கி.மீ வேக வரம்பைக் கொண்டிருக்கும்.
- அதிவேக நெடுஞ்சாலை இரண்டு பெருநகரங்களுக்கிடையேயான தூரத்தை 220 கி.மீ வரை குறைக்கும்.
- அதிவேக நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 50 கி.மீ இடைவெளியில் 75 வழி பக்க வசதிகளின் வலைப்பின்னல் திட்டமிடப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் மூலதன செலவு ரூ 82,514 கோடி. இதில் நிலம் கையகப்படுத்தும் செலவு மட்டும் ரூ 20,928 கோடி.
- டெல்லி-மும்பை பசுமைவழி அதிவேக நெடுஞ்சாலையின் நிதி, கட்டுமானம் மற்றும் செயல்பாட்டிற்காக டி.எம்.இ டெவலப்மென்ட் என்ற சிறப்பு நோக்கம் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
- பாரத்மாலா பரியோஜ்னா கட்டம் -1’இன் கீழ் சுமார் 28,000 கி.மீ நெடுஞ்சாலைகளை என்.எச்.ஏ.ஐ செயல்படுத்துகிறது. மேலும் டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலை முதன்மை காரிடார்களில் ஒன்றாகும்.