அபாயக் கட்டத்தை நெருங்கும் யமுனை நதியின் வெள்ளப்பெருக்கு..! உச்சகட்ட அலெர்ட்டில் டெல்லி..!

25 August 2020, 12:08 pm
Yamuna_flood_UpdateNews360
Quick Share

யமுனை நதியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, டெல்லியில் யமுனா ஆற்றில் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து தற்போது மிக ஆபத்தான நிலையை எட்டி உள்ளது. கடந்த அறிக்கையின்படி, யமுனை நதி நீர் மட்டம் 204.38 மீட்டர் அளவை எட்டியுள்ளது.

நிலைமை குறித்து டெல்லி நீர் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், டெல்லியில் வெள்ளத்தால் ஏற்படும் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க ஆம் ஆத்மி கட்சி அரசு தயாராக உள்ளது என்றார்.

ஹரியானாவின் யமுனா நகர் மாவட்டத்தில் உள்ள ஹத்தினாகுண்ட் தடுப்பணையில் இருந்து 5,883 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட பின்னர் டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் ஆபத்தான நிலையை நெருங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை 8 மணிக்கு தண்ணீர் விடப்பட்டது.

204.38 மீட்டர் நீர்மட்டமும் நேற்று காலை 8 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. இது 205.33 மீட்டர் அபாய அடையாளத்தை விட ஒரு மீட்டர் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு யமுனை நீர் மட்டம் 204.18 மீட்டராக இருந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் 204.32 மீட்டர் நீர்மட்டம் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

யமுனை நதியின் நீர்மட்டம் அபாயகரமான கட்டத்தை எட்டும் நிலையில் உள்ளதால், டெல்லியில் யமுனை நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 35

0

0