60 நாட்களில் 76 குழந்தைகளைக் கண்டறிந்த காவலர்..! சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கி பாராட்டிய டெல்லி காவல்துறை..!

19 November 2020, 8:02 pm
Delhi_Police_Constable_Seema_UpdateNews360
Quick Share

60 நாட்களில் காணாமல்போன 76 குழந்தைகளைக் கண்டுபிடித்து குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைந்ததற்காக அவுட்-ஆஃப்-டர்ன் பதவி உயர்வு (ஓடிபி) பெற்ற முதல் டெல்லி காவல்துறை அதிகாரியாக தலைமை கான்ஸ்டபிள் சீமா டாக்கா திகழ்கிறார். இவர் கண்டுபிடித்தவர்களில் 56 குழந்தைகள் 14 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மகளான சீமா டாக்கா, தான் எப்போதும் போலீசில் சேர விரும்பியதாகவும், 2006’ல் டெல்லி காவல்துறையில் சேர்க்கப்பட்டபோது தனது கனவை அடைந்ததாகவும் கூறினார்.

“எனது பணிக்காக எனக்குக் கிடைத்த வெகுமதி மற்றும் அங்கீகாரத்தில் நான் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன். இதுபோன்ற வழக்கத்திற்கு மாறான பதவி உயர்வுகள் அதிக முயற்சி எடுக்க ஊக்குவிக்கின்றன.” என்று அவர் கூறினார். சீமா டாக்கா மேலும் கூறுகையில், அவர் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக மாறுவார் என்று நினைத்துப் பார்த்ததில்லை என்றும் தலைமை கான்ஸ்டபிளில் இருந்து பதவி உயர்வு பெற குறைந்தபட்சம் 10 வருடம் ஆகும் என எண்ணியிருந்ததாகவும் கூறினார்.

டெல்லி முழுவதும் பல மாவட்டங்களில் சீமா டாக்கா பணியாற்றியுள்ளார். 2014’ஆம் ஆண்டில் அவர் தலைமை கான்ஸ்டபிளாக பதவி உயர்வு பெற்றபோது, அவர் தென்கிழக்கு டெல்லிக்கு அனுப்பப்பட்டார். 2017’ஆம் ஆண்டில், அவர் வெளி வடக்கு டெல்லி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணையை கையாள்வதில் அனுபவம் வாய்ந்த டாக்கா, தான் இன்னும் அதிகம் செய்ய விரும்புவதாகக் கூறினார்.

“காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க என்னை அனுமதிக்குமாறு எனது மூத்தவர்களை நான் கேட்டுக்கொண்டேன். நான் ஏற்கனவே பணிபுரிந்து வரும் வழக்குகள் பாதிக்கப்படாது அல்லது அவர்களின் விசாரணை தாமதமாகாது என்று நான் அவர்களுக்கு உறுதியளித்தேன்.” என்று அவர் கூறினார். அவரது மேலதிகாரிகள் அவரை நம்பினர்.

பின்னர் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க டாக்கா இரண்டு மாதங்கள் என்ற இலக்கை நிர்ணயித்தார். அவரது பெரும்பாலான வழக்குகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்து பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன குழந்தைகளை உள்ளடக்கியது. இந்த வழக்குகளில் சில 2013’ஆம் ஆண்டிற்கு முந்தையவை. அந்த வழக்குகள் அப்போது தீர்க்கப்படவில்லை. ஆனால் சரியான முறையில் அவற்றை விசாரித்து சீமா டாக்கா தீர்த்துள்ளார்.

காவல்துறையைத் தவிர, காணாமல் போன குழந்தைகளை அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைக்க உள்ளூர் மக்களும் உதவியதாக டாக்கா கூறினார். “நான் என்ன செய்ய முயற்சிக்கிறேன் என்பதை மக்கள் அறிந்ததும், அவர்கள் அதிக தகவல்களை கொடுக்கத் தொடங்கினர்.” என்று அவர் கூறினார்.

Views: - 0

0

0