டெல்லியில் பெண் ஒருவர் ரயில்வே ஊழியர்கள் இரண்டு பேர் உள்பட 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.
டெல்லி ரயில்நிலையத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்காக குடியை அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குடிசையில் ரயில்வே ஊழியர்கள் 2 பேர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். மற்ற இருவர் குடிசைக்கு வெளியே காவலுக்கு நின்றுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல் வெளியாகியுள்ளன.
அதாவது, பாதிக்கப்பட்ட பெண் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில்தான், அந்தப் பெண்ணுடன் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள 35 வயதான சதீஷ் குமார் பழகியுள்ளார். தான் ரயில்வேயில் பணியாற்றுவதாகக் கூறி அறிமுகம் செய்து கொண்டதுடன், இந்திய ரயில்வேயில் அப்பெண்ணுக்கும் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளார்.
இந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு விருந்து கொடுப்பதாக டெல்லிக்கு வரவழைத்து ரயில் நிலையம் அழைத்து வந்து அங்கிருக்கும் பராமரிப்பு ஊழியர்களுக்கான குடிசையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 2 மணி சம்பவத்தில் குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.