செங்கோட்டையில் வன்முறையில் ஈடுபட்டது இவர்கள் தான்..! புகைப்படங்களை வெளியிட்டது டெல்லி போலீஸ்..!

3 February 2021, 11:04 am
delhi_protestors_updatenews360
Quick Share

குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் வன்முறையில் ஈடுபட்ட 20 பேரின் புகைப்படங்களை டெல்லி காவல்துறை வெளியிட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஒரு டிராக்டர் பேரணியை நடத்துவதாகக் கூறி, டெல்லியில் கடும் வன்முறையில் ஈடுபட்டபோது செங்கோட்டையில் பலர் அத்துமீறினர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்த விவசாயிகள் சங்கங்கள் ஏற்பாடு செய்த ஜனவரி 26 டிராக்டர் அணிவகுப்பில் டெல்லி வன்முறையைக் கண்டது. 

பல எதிர்ப்பாளர்கள், டிராக்டர்களை தாறுமாறாக ஒட்டிச் சென்றதோடு, செங்கோட்டையை அடைந்து, அதன் குவிமாடங்கள் மற்றும் கோபுரங்களில் தங்கள் மதக் கொடிகளை ஏற்றி வைத்தனர்.

கடந்த சனிக்கிழமை வரை, வன்முறை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 1,700 வீடியோ கிளிப்புகள் மற்றும் சி.சி.டி.வி காட்சிகளை காவல்துறையினர் பெற்றுள்ளனர். மேலும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் செங்கோட்டையில் வன்முறையில் ஈடுபட்ட 20 நபர்களின் புகைப்படங்களை டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ளது.

Views: - 25

0

0