தகிக்கும் வெயில்….தவிக்கும் டெல்லி: 76 ஆண்டுகளுக்கு பின் கடும் வெயில்…!!

Author: Aarthi Sivakumar
30 March 2021, 12:56 pm
delhi summer - updatenews360
Quick Share

புதுடெல்லி : டெல்லியில் 76 ஆண்டுகளுக்குப் பின் மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக நேற்று 40.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. டெல்லியில், நேற்று கடும் வெயிலுக்கு நடுவே ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நேற்று டெல்லியில் பதிவான அதிகபட்ச சராசரி வெப்பநிலை, 40.1 டிகிரி செல்ஷியஸ் ஆக இருந்தது. இது, வழக்கமான வெப்பநிலையை விட 8 டிகிரி செல்ஷியஸ் அதிகம். இதற்கு முன் 1945ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

இந்நிலையில், 76 ஆண்டுகளுக்கு பிறகு, மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை நேற்று பதிவாகி உள்ளது. கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டமின்றி இருந்தது. காற்றின் வேகம் குறைந்தது உள்ளிட்டவை வெப்பநிலை உயர்வுக்கு காரணமாக இருந்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

வெப்பநிலை உயர்வின் காரணமாக டெல்லி முழுவதும் கடும் அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Views: - 173

0

0