போராட்டம் என்ற பெயரில் தலைநகரின் கழுத்தை நெரித்தது போதாதா?: விவசாய அமைப்புகளை கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம்..!!

Author: Aarthi Sivakumar
1 October 2021, 5:45 pm
Quick Share

புதுடெல்லி: போராட்டம் என்ற பெயரில் நாட்டின் தலைநகர் டெல்லியின் கழுத்தை நெரித்து விட்டீர்கள் என விவசாய அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியின் எல்லைகளில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் ஓராண்டை நிறைவு செய்தது.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் விவசாயிகள் நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ நடத்தினர். இந்நிலையில், விவசாயிகள் மற்றும் கிசான் மகா பஞ்சாயத்து சார்பில் உச்சநீதிமன்றத்தில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 200 விவசாயிகள் சத்தியாகிரக போராட்டம் நடத்த உள்ளனர். இதற்கு அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு ஏ.எம்.கான்வில்கர், சி.டி.ரவிக்குமார் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், போராட்டம் என்ற பெயரில் ஒட்டுமொத்த தலைநகரின் கழுத்தையும் நெரித்துவிட்டு, இப்போது நகரின் மையத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறீர்களா? உங்களின் போராட்டத்தால் மக்கள் மகிழ்ந்தனரா? என கேள்வி எழுப்பினர்.

Views: - 471

0

0