‘அட்வென்சர் ஓவர்லோட்’ : டெல்லி டூ லண்டன் பேருந்தில் ஒரு சாகச பயணம்.., கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

2 September 2020, 2:00 pm
Quick Share

15 லட்சம் ரூபாய் செலவில் 18 நாடுகளுக்கு பேருந்தில் பயணிக்கும் ஒரு சாகத்தை ‘அட்வென்சர் ஓவர்லாண்ட்’ நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

இயற்கையின் கலை நயத்தோடு, மனிதனின் தலைநயமும் இணைந்து, உலகம் ரம்மியமாக காட்சி அளிகம் பல்வேறு சுற்றுலா பகுதிகள் உலகம் முழுவதும் உள்ளது.

அதை பார்க்க, ரசிக்க துடிக்காத மனங்கள் இருக்க முடியாது. அதை மையமாக வைத்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக, ஹரியானா மாநிலத்தின் குருகுராம் பகுதியைச் சேர்ந்த நிறுவனமான ‘அட்வென்சர் ஓவர்லாண்ட்’, புது முயற்சியை கையாண்டுள்ளது.

தரை வழி சாகச பயணங்களுக்காகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் உலகளவில் பல சாகசங்களைச் செய்து வருகிறது. பேருந்தில் பயணிகளை அழைத்துக்கொண்டு உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வரும்,இந்த பேருந்தில், குறைந்த அளவில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த 2010-க்குப் பிறகு தொடங்கப்பட்ட இன்நிறுவனம் அண்டார்டிக்காவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் பேருந்தில் பயணித்து, 75 நாடுகளில் சாகசங்களை நிகழ்த்தி, 16 உலக சாதனைகளைப் படைத்துள்ளது. தற்போது டெல்லியிலிருந்து லண்டன் வரை பஸ் பயணம் என மற்றொரு ஆச்சர்யத்தைத் தொடங்கியிருக்கிறது அட்வெஞ்சர் ஓவர்லாண்ட்.

‘லண்டனுக்கு பஸ்’ என்று பெயரிடப்பட்ட இப்பயணம் டெல்லியில் தொடங்கி லண்டனில் முடியும் முதல் பேருந்து பயணமாகும். 18 நாடுகளுடன் 20,000 கிலோமீட்டர் தூரம் கொண்ட பயணம் 70 நாள்கள் நடைபெறுகிறது இதற்கு கட்டணமாக 15 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இந்த பயணத்தில் இணைபவர்கள் மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனா, கிர்கிஜிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, லாட்வியா, லித்வேனியா, போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைக் கடந்து லண்டன் செல்வார்கள்.

Views: - 0

0

0