குண்டடி பட்டும் துணிச்சலுடன் குற்றவாளிகளை கைது செய்த டெல்லி பெண் போலீஸ் அதிகாரி..! குவியும் பாராட்டுகள்..!

Author: Sekar
25 March 2021, 12:40 pm
priyanka_sharma_updatenews360
Quick Share

டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு இன்று அதிகாலை ஒரு மோதலுக்குப் பிறகு இரண்டு தேடப்படும் குற்றவாளிகளை கைது செய்துள்ளது. இருவரும் ரோஹித் சவுத்ரி மற்றும் டிட்டு என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இருவரையும் கைது செய்வதற்கான போலீஸ் குழுவை வழிநடத்திய ஒரு பெண் அதிகாரி, துணிச்சலுடன் குற்றவாளிகளை எதிர்த்துப் போராடி, குற்றவாளிகள் இருவரையும் காலில் சுட்டு உயிருடன் பிடித்தார். பிரியங்கா சர்மா எனும் பெண் போலீஸ் அதிகாரி டெல்லி காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

முன்னதாக, இரண்டு குற்றவாளிகளும் பைரோன் கோவில் சாலையை அடைவார்கள் என்பது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் ரோஹித் மற்றும் அவரது கூட்டாளியை கைது செய்ய போலீசார் குறிப்பிட்ட அந்த பகுதியில் வலை விரித்தனர். பிரகதி மைதானம் அருகே இந்த என்கவுன்டர் நடந்தது.

கிடைத்த விவரங்களின்படி, இரண்டு குற்றவாளிகளும் தாங்கள் போலீசாரின் வலையில் சிக்கியிருப்பதை உணர்ந்தவுடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பிரியங்காவின் அணி அதே திறனில் பதிலடி கொடுத்தது. 

இதில் குற்றவாளிகள் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. மேலும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரியங்காவும் ஒரு தோட்டாவால் தாக்கப்பட்டார். ஆனால் குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ரோஹித் மற்றும் டிட்டு தற்போது நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இருவரும் கொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அவர்கள் எம்சிஓசிஏ’இன் கீழ் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், துணிச்சலுடன் குற்றவாளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை கைது செய்த டெல்லி பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Views: - 199

1

0