உலகளவில் உயர்ந்து வரும் இந்திய மருத்துவ முறையின் தேவை..! ஆயுர்வேத கல்வி நிறுவனங்களை தொடங்கி வைத்து மோடி உரை..!

13 November 2020, 12:23 pm
pm_modi_swami_vivekananda_statue_jnu_campus_updatenews360
Quick Share

ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.டி.ஆர்.ஏ) மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனம் (என்.ஐ.ஏ) ஆகிய இரண்டு ஆயுர்வேத நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

“இன்றைய சகாப்தத்தில் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இந்த அணுகுமுறை மருத்துவ உலகில் ஆயுர்வேதத்தை முக்கிய பங்கு வகிக்கச் செய்துள்ளது. அலோபதி மற்றும் ஆயுர்வேத நடைமுறைகள் இப்போது கைகோர்க்கும். முதன்முறையாக, நமது பண்டைய இந்தியாவின் அறிவியல் 21 நூற்றாண்டின் அறிவியலுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.” என்று பிரதமர் மோடி கூறினார்.

“இப்போது நீங்கள் அனைவரும் நாட்டின் மிக உயர்ந்த ஆயுர்வேத மையத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், உங்கள் பொறுப்பு அதிகரித்துள்ளது. சர்வதேச அளவிலான பாடத்திட்டங்களை நீங்கள் கொண்டு வர வேண்டும்.” என்று பிரதமர் மோடி இரு நிறுவனங்களையும் திறந்து வைத்த பின்னர் கூறினார்.

மஞ்சள் மற்றும் ஆயுர்வேத பொருட்கள் போன்ற இந்தியாவில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்களின் தேவை உலகளவில் வளர்ந்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

“நம் நாடு அதிக மக்கள்தொகை கொண்டதாக இருந்தாலும், கொரோனா நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் பால், அஸ்வகந்தா மூலிகை, காதா போன்ற நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்கள் பயன்பாட்டில் இருப்பது தான். தொற்றுநோய்களின் போது இந்த தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

“ஆயுர்வேத தின வாழ்த்துக்கள். இந்த சிறப்பு நாளில், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் அமைந்துள்ள இரண்டு ஆயுர்வேத நிறுவனங்களை திறந்து வைக்கவுள்ளேன். நிகழ்ச்சி காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது. பாருங்கள்!” என அவர் ட்வீட் செய்தார்.

ஆயுஷ் அமைச்சகம் 2016 முதல் ஆயுர்வேத தினத்தை தன்வந்தரி ஜெயந்தி தினத்தில் அனுசரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 29

0

0