பண மதிப்பிழப்பால் இவ்வளவு நன்மைகளா..? பிரதமர் மோடி விளக்கம்..!

8 November 2020, 5:16 pm
Narendra_Modi_UpdateNews360
Quick Share

பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நான்காவது ஆண்டு நினைவு நாளில், பிரதமர் நரேந்திர மோடி, இந்த நடவடிக்கை கறுப்புப் பணத்தைக் குறைக்கவும், வரி முறைப்படுத்தலை அதிகரிக்கவும் உதவியது என்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க ஊக்கமளித்தது என்றும் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 8, 2016 அன்று, கறுப்புப் பணப் பிரச்சினையைச் சமாளிக்க பிரதமர் மோடி ரூ 500 மற்றும் ரூ 1,000 நோட்டுக்களை பணமதிப்பிழப்பு செய்தார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகள், “பல கோடி மதிப்புள்ள வெளியிடப்படாத வருமானத்தை கண்டுபிடிக்க வழிவகுத்தது. ஆபரேஷன் கிளீன் பணம் சார்ந்த பொருளாதாரத்தை முறைப்படுத்த உதவியது.” என்பதை கண்டறிந்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இன்று வெளியிட்ட ஒரு ட்வீட்டில், “பண மதிப்பிழப்பு வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவந்தது மட்டுமல்லாமல் வரி தளத்தை விரிவுபடுத்த, கள்ள நோட்டுகளை கட்டுப்படுத்த மற்றும் பணப் புழக்கத்தை அதிகரிக்க உதவியது” என்று கூறினார்.

தொடர்ச்சியான ட்வீட்களில், பணமதிப்பிழப்பின் சிறப்பை அடிக்கோடிட்டுக் காட்டிய நிர்மலா சீதாராமன், “இந்தியாவை ஊழலிலிருந்து விடுவிப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, மோடி அரசு 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பண மதிப்பிழப்பை நடைமுறைப்படுத்தியது.

கறுப்புப் பணம் மீதான முன்னோடியில்லாத தாக்குதலாக இருந்த இந்த நடவடிக்கை சிறந்த வரி இணக்கத்திற்கும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பெரும் உந்துதலுக்கும் வழிவகுத்தது.” என மேலும் கூறினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் முதல் நான்கு மாதங்களில், சுமார் ரூ 900 கோடி கறுப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ 3,950 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் தெரிவித்தார்.

Views: - 20

0

0

1 thought on “பண மதிப்பிழப்பால் இவ்வளவு நன்மைகளா..? பிரதமர் மோடி விளக்கம்..!

Comments are closed.