மன்மோகன் சிங்கிற்கு டெங்குக் காய்ச்சல்: எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

Author: Udhayakumar Raman
16 October 2021, 7:33 pm
manmohansingh-updatenews360
Quick Share

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை என, தொடர்ந்து 10 ஆண்டு காலம் நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார். தற்போது அவருக்கு வயது 89. வயது மூப்பு மற்றும் உடல் நலப் பிரச்னைகளால், பொது நிகழ்ச்சிகளில், மன்மோகன் சிங் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருகிறார்.
கடுமையான காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த மன்மோகன் சிங், கடந்த புதன் கிழமை அன்று, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், இருதயப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறது.இந்த நிலையில் அவரது உடலில் ரத்தத் தட்டுக்கள் மெல்ல அதிகரித்து வருவதாகவும், அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்மோகன் சிங்குக்கு கடந்த திங்கள்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட அவா், உடல் சோர்வாக இருப்பதாக தெரிவித்தார். அதைத் தொடா்ந்து 16-ம் தேதி மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அது தொடா்பான பரிசோதனையும் அவருக்கு நிபுணா்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இந்தச் சூழலில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெங்கு பாதிப்பு உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது, அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் டெங்கு இருப்பது உறுதியாகியுள்ளது.மன்மோகன் சிங் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், அவரது உடலில் பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Views: - 193

0

0