கேரள காங்கிரசிலும் கோஷ்டி மோதல்..! சீட் தர மறுத்ததால் மஹிலா காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த மூத்த தலைவி..!

Author: Sekar
14 March 2021, 9:19 pm
lathika_kerala_congress_updatenews360
Quick Share

வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், காங்கிரஸ் மூத்த தலைவி லத்திகா சுபாஷ், மாநில மஹிலா காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாததை கண்டித்து லத்திகா சுபாஷ் தலையை மொட்டையடித்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

லத்திகா சுபாஷ் எட்டுமனூரிலிருந்து போட்டியிட விரும்பினார். 2018’ஆம் ஆண்டில் ராகுல் காந்தியால் மாநிலத்தில் மஹிலா காங்கிரஸின் புதிய தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில் காங்கிரஸின் தலைவராக ராகுல் காந்தி இருந்தார்.

கேரள காங்கிரசில் அதிகரிக்கும் பிளவு :

பல காலமாக கட்சிக்கு சேவை செய்து வரும் பெண்களை புறக்கணிப்பதாக லத்திகா குற்றம் சாட்டினார். தான் வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டேன் என்றும், தற்போது வரை சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக கேரளாவில் காங்கிரசுக்குள் ஏற்பட்ட பிளவு வெளிப்படையாகவே உள்ளது. முன்னதாக இன்று, கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான கே.சுதாகரன், வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு மற்றும் தகுதி ஆகியவை இடங்களை விநியோகிப்பதற்கான அளவுகோல்களாக இல்லை என்று குற்றம் சாட்டினார்.

கேரளாவில் காங்கிரஸ் செயற்குழுத் தலைவரான சுதாகரன், தனது அரசியல் தளமான கண்ணூருக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை குறித்து கூட தன்னிடம் ஆலோசிக்கப்படவில்லை என்று கூறினார்.

வேட்பாளர்கள் தங்கள் கோஷ்டி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

86 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கேரள காங்கிரஸ் :

வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான 86 வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது.

முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி புதுப்பள்ளியில் இருந்து போட்டியிடுகிறார். கேரள சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஹரிபாத் சட்டமன்றத் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் கே கருணாகரனின் மகனான வதகரா முரளீதரன் எம்.பி., தற்போது பாஜக பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலத்தின் ஒரே இடமான நெமோமில் போட்டியிடுகிறார்.

கேரள சட்டமன்ற வாக்கெடுப்பு ஏப்ரல் 6’ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2’ஆம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 59

0

0