முதல் பரிசாக ₹ 5 லட்சம்..! இந்திய சுதந்திரத்தின் 75’வது ஆண்டை குறிக்கும் வகையிலான கட்டிட வடிவமைப்பு போட்டி அறிவிப்பு..!

13 November 2020, 4:28 pm
Central_Vista_Project_UpdateNews360
Quick Share

இந்திய சுதந்திரத்தின் 75’வது ஆண்டை நினைவுகூரும் வகையில் புதுடெல்லியில் உள்ள நவ பாரத் உதயனில் பிரமாண்ட கட்டிடம் ஒன்றை கட்டியெழுப்ப, மத்திய வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும் மத்திய பொதுப்பணித்துறையும் இணைந்து போட்டியை அறிவித்து உள்ளது.

இந்த போட்டியில் இந்திய குடிமக்கள் மற்றும் அமைப்புகள் மட்டுமே பங்குபெற முடியும். 

மேலும் கட்டடக் கலைஞர்கள், கட்டடக்கலை நிறுவனங்கள், மாணவர்கள், மாணவர் குழுக்கள், கட்டடக்கலை அல்லது திட்டமிடல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பிற நிறுவனங்கள் தனியாகவோ அல்லது இணைந்தோ இந்த போட்டியில் பங்குபெறலாம். 

போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ₹ 5 லட்சம் பரிசும், சிறந்த வடிவமைப்பை வழங்கும் இதர ஐந்து நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பான முக்கிய அம்சங்களை விளக்குவதற்கான ஒரு வெபினார் வரும் நவம்பர் 17’ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பதிவு செய்ய டிசம்பர் 11 கடைசி தேதியாகும்.

மேலும் வடிவமைப்பை சமர்ப்பிக்கவும் கடைசி தேதி டிசம்பர் 11, 2020 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வெற்றியாளர்கள் 2020 டிசம்பர் கடைசி வாரத்தில் அறிவிக்கப்படுவார்கள்.

Views: - 26

0

0