பஞ்சாபில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிப்பதற்கு எதிர்ப்பு..! போராட்டத்தில் குதிப்பதாக 32 உழவர் சங்கங்கள் அறிவிப்பு..!

5 May 2021, 10:01 pm
Farmers_Protest_Punjab_UpdateNews360
Quick Share

பஞ்சாபில் கொரோனா பாதிப்புகள் கடுமையாக அதிகரித்த போதிலும், மாநிலத்தில் உள்ள 32 உழவர் சங்கங்கள் மே 8’ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு எதிராக பெரிய அளவில் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளன.

விவசாயிகள் ஊரடங்கை மீறி போராட்டத்தில் சேர மற்றவர்களையும் கேட்டுள்ளனர்.

இதற்கிடையே பஞ்சாபில் நேற்று ஒரே நாளில் 173 கொரோனா இறப்புகளும் 7,601 புதிய கொரோனா பாதிப்புகளும் பதிவாகியுள்ளது. இது மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கையை 9,645 ஆகவும், தொற்று எண்ணிக்கையை 3,99,556 ஆகவும் அதிகரித்துள்ளது.

சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 60,709’லிருந்து நேற்று 61,935 ஆக உயர்ந்தது.

புதிய இறப்புகளில், பதிந்தா மற்றும் லூதியானாவில் இருந்து தலா 20 மரணங்களும், அமிர்தசரஸ் மற்றும் பாட்டியாலாவிலிருந்து தலா 16 பேரும், மொஹாலியைச் சேர்ந்த 12 பேரும், பாசில்கா மற்றும் சங்ரூரில் இருந்து தலா 10 பேரும் அடங்குவர்.

இதற்கிடையில், கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழுவின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் அமிர்தசரஸில் டெல்லியின் சிங்கு எல்லைக்குச் செல்வதற்கு முன்பு கூடி, இன்று மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

பஞ்சாபில் கொரோனா நெறிமுறை மற்றும் ஊரடங்கை மீறி, டிராக்டர்-டிரெய்லர்கள், கார்கள் மற்றும் டெம்போ வாகனங்களில் விவசாயிகள் வெளியேறினர்.

மே 2’ஆம் தேதி, ஹரியானா காவல்துறை பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் மற்றும் 12 பேர் மீது மகா பஞ்சாயத்து நடத்தியதாகவும், சிஆர்பிசி பிரிவு 144’ன் கீழ் தடை உத்தரவுகளை மீறியதாகவும் வழக்கு பதிவு செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

Views: - 158

0

0