கொரோனாவில் இருந்து அமித் ஷா குணம் பெற வாழ்த்துகள்…! தேவேந்திர பட்னவிஸ் டுவிட்

3 August 2020, 9:32 am
Devendra Fadnavis 01 updatenews360
Quick Share

மும்பை: கொரோனா பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா. 200 நாடுகளில் கடும் பாதிப்பை உருவாக்கி உள்ளது. உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

வல்லரசு நாடான அமெரிக்கா அதிக கொரோனா நோயாளிகளுடன் முதலிடத்திலும், பிரேசில் 2வது இடத்திலும் உள்ளது. இந்தியாவிலும் கடும் பாதிப்பு கொரோனாவால் ஏற்பட்டுள்ளது.

தொடக்கத்தில் லேசான பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா, படிப்படியாக உச்சத்தை தொட்டுள்ளது. மக்கள், மருத்துவர்கள், காவலர்கள் என்று இல்லாமல் இப்போது அரசியல் தலைவர்களையும் இந்த கொரோனா பிடித்து ஆட்டுகிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கொரோனாவால் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா பாதிப்பை அவரே தமது டுவிட்டர் பதிவின் வாயிலாக அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.

அவர் குணமடைய பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: முழு தேசத்தின் நல்வாழ்த்துக்களும் உங்களுக்கு உள்ளது. நீங்கள் இதில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று  கூறியுள்ளார்.

இதேபோல்  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் கொரோனாவில் இருந்து  குணமடைய வேண்டும் என்றும் பட்னவிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Views: - 14

0

0