நகைக்கடைகளில் விடிய விடிய வியாபாரம் : வடமாநிலங்களில் களைகட்டிய தன்தேரஸ் கொண்டாட்டம்!!

13 November 2020, 1:25 pm
Dhanteras - Updatenews360
Quick Share

வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகையின் தொடக்கமாக தன்தேரஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் புத்தாடைகள் வாங்கவும், பொருட்களை வாங்கவும் கடை வீதிகளில் களைகட்டியுள்ளனர். இந்த நிலையில் வடமாநிலங்களில் தீபாவளி தொடக்கமாக தன்தேரஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகையின் தொடக்கமாக கருதப்படும் தன்தேரஸ், செல்வங்களை அருளும் திருமகளான லட்சுமி பூஜைக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அந்த வகை​யில், வடமாநிலங்களில் தன்தேரஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தன்தேரஸ் திருநாளில் வெள்ளி, தங்க நாணயங்கள் மற்றும் நகைகள் வாங்குவது செல்வத்தை பெருக்கும் என்பது வடமாநில மக்‍களின் நம்பிக்‍கையாக உள்ளது. இதனையொட்டி, மக்கள் நேற்று நகைக்கடைகளில் திரண்டனர். பொன், வெள்ளி பொருட்களை வாங்கி, பாலில் ஊற வைத்து சிறப்பு லட்சுமி பூஜைகள் செய்தனர்.

விடிய விடிய நகைக்கடைகளில் வியாபாரம் களைகட்டியது. இது தொடர்பாக டிவிட்டரில் வடமாநிலத்தவர்கள் #HappyDhanteras என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Views: - 23

0

0