ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்பதில் சிக்கல் : பாறைகளால் பணிகளில் தொய்வு!!
Author: Udayachandran RadhaKrishnan7 June 2023, 11:15 am
மத்திய பிரதேச மாநிலம் சேஹூர் அருகே மூங்வாலி கிராமத்தில் வீட்டின் அருகே 2 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுமியை மீட்கும் வகையில் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
சிறுமி 30 அடி ஆழத்தில் உள்ள நிலையில் மீட்புக் குழுவினர் புல்டோசர் மூலம் அருகில் உள்ள பகுதியை தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் 20 அடி ஆழத்திற்கு கீழ் முழுவதும் பாறைகளாக உள்ளதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம்புலனஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.
குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் அறிந்த கிராமவாசிகள் அங்கு கூடியதால் பரபரப்பு காணப்படுகிறது. தவறி விழுந்த குழந்தை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.