“எங்கள் உள்விவகாரங்களில் தலையிடத் தேவையில்லை”..! கனடா பிரதமர் கருத்துக்கு இந்தியா பதிலடி..!

1 December 2020, 3:16 pm
Justin_Trudeau_UPdateNews360
Quick Share

அமைதியான போராட்டங்களின் உரிமையைப் பாதுகாக்க தனது நாடு எப்போதும் உடனிருக்கும் என விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அறிக்கைக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

“இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் தொடர்பான கனடா தலைவர்களின் சில தவறான தகவல்களை நாங்கள் கண்டிருக்கிறோம். குறிப்பாக ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பாக இவை தேவையற்றவை” என்று மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“இராஜதந்திர உரையாடல்கள் அரசியல் நோக்கங்களுக்காக தவறாக சித்தரிக்கப்படவில்லை என்பதை உணர்வதும் நல்லது” என்று அவர் மேலும் கூறினார்.

இன்று முன்னதாக, கனடா பிரதமர் அங்குள்ள இந்திய சமூகத்திடம், புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து அவர் கவலை தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தனது கருத்துக்களை தெரிவித்த முதல் உலகத் தலைவர் கனடா பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

குருநானக் தேவின் 551’வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் நடந்த ஆன்லைன் நிகழ்வின் போது கனடாவில் உள்ள இந்திய சமூகத்திடம் உரையாற்றிய ட்ரூடோ, விவசாயிகளின் எதிர்ப்பு குறித்து இந்தியாவில் இருந்து வெளிவரும் செய்திகளை அங்கீகரிக்காவிட்டால் தான் பொறுப்பற்றவராகி விடுவேன் என்று கூறினார்.

“அமைதியான எதிர்ப்பின் உரிமையைப் பாதுகாக்க கனடா எப்போதும் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். உரையாடலின் முக்கியத்துவத்தை நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் எங்கள் கவலைகளை முன்னிலைப்படுத்த பல வழிகளில் இந்திய அதிகாரிகளிடம் நேரடியாக பேசியுள்ளோம்” என்று அவர் கூறினார்.

கொரோனா காரணமாகவும், எல்லாவற்றையும் விடவும் அனைவரும் ஒன்றாக இருக்க இது ஒரு தருணம் என்று அவர் கூறினார். “ஒருவருக்கொருவர் உதவ நாங்கள் இருப்பதால் நாம் தொடர்ந்து ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்.” என்று அவர் கூறினார்.

குரு நானக் தேவின் பிறந்த ஆண்டு விழாவில் தனது வாழ்த்துக்களை தெரிவித்த அவர், “இந்த ஆண்டு இயல்பை விட இன்னும் ஒன்றாக வர வேண்டிய முக்கியமான நேரம் இது. ஏனெனில் கொரோனா நம் அனைவரையும் தனித்தனியாக வைத்திருக்கிறது.” எனக் கூறினார்.

கனடாவில் ஏராளமான இந்தியர்கள், குறிப்பாக அதிக சீக்கியர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 23

0

0