தலித்துகளுக்கான ஆதரவு..! கபட நாடகம் ஆடும் காங்கிரஸ்..! உண்மையைப் போட்டுடைத்த காங்கிரஸ் தலித் எம்எல்ஏ..!

By: Sekar
14 October 2020, 2:33 pm
Rajasthan_Congress_MLA_Babulal_Bairwa_UpdateNews360
Quick Share

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாபுலால் பைர்வா தலித்துகள் மீதான காங்கிரஸின் போலி ஆதரவை அம்பலப்படுத்தியுள்ளார். மேலும் இரண்டு ராஜஸ்தான் அமைச்சர்கள் தலித்துகளுக்கு உதவவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸின் வேத் பிரகாஷ் சோலன்கியும் பைர்வாவின் குற்றச்சாட்டு குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும் சில காங்கிரஸ் தலைவர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்களைப் பொருட்படுத்தவில்லை என்றும் கூறினார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் இந்த கூற்றுகளுக்கு பதிலளித்த பாஜக தலைவர் லக்ஷ்மிகாந்த் பரத்வாஜ், தலித்துகளின் உரிமைகளைப் பாதுகாக்க காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

“அரசாங்கம் காதணிகளை அணிந்து வருகிறது. ராஜஸ்தானில் தலித்துகளுக்கு எதிராக தினசரி அட்டூழியங்கள் நடந்து வருகின்றன. இப்போது தலித் எம்.எல்.ஏ.வின் குறைகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளதன் மூலம் உண்மைத்தன்மை தெரிய வந்துள்ளது. ஆனால் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை.” என பரத்வாஜ் மேலும் தெரிவித்தார்.

இது ஒரு தனி நபர் வழக்கு அல்ல என்று கூறி, காங்கிரஸைச் சேர்ந்த தலித் மற்றும் பழங்குடியின எம்.எல்.ஏக்கள் தங்கள் குறைகளை அவ்வப்போது குரல் கொடுத்துள்ளனர் எனவும் அவர் கூறினார். ஆனால் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உதவி மற்றும் மேம்பாட்டை உறுதியளித்து ஆட்சிக்கு வந்த கெலாட் எதுவும் செய்யாமல் பதவியில் அமர்ந்திருக்கிறார் என்று பாஜக தலைவர் மேலும் கூறினார்.

இந்நிலையில் ஊடகங்களிடம் பேசிய பைர்வா, தலித்துகளின் வேலைகளைச் செய்வதற்கு எந்தவொரு மனுவைக் கொடுக்கும் போதெல்லாம் அது கண்டுகொள்ளப்படுவதில்லை என்று கூறினார்.

“பாஜக தலித்துகளையும் சிறுபான்மையினரையும் மனிதர்களாக கருதுவதில்லை என்று ராகுல் காந்தி கூறுகிறார். ஆனால் ராஜஸ்தானில் காங்கிரசிலும் இதேதான் நடக்கிறது. அவர் இப்போது என்ன சொல்வார்?” என பைர்வா கூறினார்.

முன்னர் பைர்வா கெலாட் அரசாங்கத்தை காப்பாற்ற சச்சின் பைலட்டை விட்டு வெளியேறி அசோக் கெலாட்டுடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

“நான் பைலட்டுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அவர் எனக்கு தேர்தலில் சீட் கொடுத்தார். அவரால் தான் எனக்கு வாக்குகள் கிடைத்தன. குர்ஜார்கள் எனக்கு வாக்களித்தனர். ஆனால் சைனி மற்றும் மாலியிடமிருந்து எந்த வாக்குகளும் வரவில்லை.” என பைர்வா மேலும் தெரிவித்தார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் பாஜகவினர் தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரை மனிதர்களாக கருதுவதில்லை என்றும் அதை வெட்கக்கேடான உண்மை என்றும் கூறிய நிலையில், காங்கிரசார் தான் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என பொட்டில் அடித்தாற்போல், காங்கிரஸ் தலித் எம்எல்ஏ கூறினார்.

Views: - 40

0

0