அரசு ஊடகத்தில் பணியாற்றிய பெண்கள் நீக்கம்.. செய்தி வாசிப்பாளர்களாக தலிபான்கள் நியமனம் : பாதிக்கப்பட்டோர் கண்ணீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2021, 8:39 pm
Taliban News Readers -Updatenews360
Quick Share

ஆப்கானிஸ்தான் : அரசு ஊடகத்தில் வேலை செய்த பெண் ஊழியர்களை தாலிபான்கள் பணி நீக்கம் செய்துள்ளனர்.

ஆப்கனில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள், பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். அவர்களுடைய ஆட்சியில் பெண்களுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்ற அச்சம் உலகத்தை கவலைக் கொள்ளச் செய்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தலிபான் அமைப்பு, இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படி பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதே போல மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் மட்டும் வேலை செய்ய பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஆப்கானிஸ்தான் அரசு ஊடகத்தில் பணியாற்றிய பெண் செய்தி வாசிப்பாளர்கள், செய்தியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு பதிலாக தலிபான் செய்தியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, இனி என்ன செய்ய போகிறோம், அடுத்த தலைமுறைக்கு இங்கு எந்த வேலையும் இல்லை, 20 வருடங்களாக என்ன சாதிக்கப்பட்டதோ அது எல்லாமே வீணாக போபப்போகிறது என்றும், தலிபான்களிடம் எந்த மாற்றமும் இல்லை என உருக்கமாக தெரிவித்துள்ளனர்,.

Views: - 535

0

0