வாக்கிங் சென்ற நீதிபதி ஆட்டோ ஏற்றிக்கொலை : பட்டப்பகலில் வெறிச்செயல்… திடுக்கிடும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
29 July 2021, 1:17 pm
jharkhand judge murder - updatenews360
Quick Share

ஜார்க்கண்டில் சாலையின் ஓரம் வாக்கிங் சென்ற மாவட்ட நீதிபதி, ஆட்டோ ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்பாக் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் என்பவர் ஹிராப்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே நேற்று நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்புறமாக வந்த ஆட்டோ என்று சாலையின் ஓரத்தில் வாக்கிங் சென்று கொண்டிருந்த நீதிபதியை மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதனால், சாலையின் ஓரத்தில் அவர் சுருண்டு விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், நீதிபதி உத்தம் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீதிபதியின் மரணம் விபத்து எனக் கருதப்பட்டு வந்த நிலையில், விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இதனிடையே, தனது கணவரை ஆட்டோ ஏற்றி கொலை செய்த சம்பவத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தம் ஆனந்தின் மனைவி கிருதி சின்ஹா கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளையில், நீதிபதியின் மரணத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு ஜார்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

Views: - 270

0

0