சொத்துக் குவிப்பு முறைகேடு வழக்கு..! கர்நாடக காங்கிரஸ் தலைவருக்கு சம்மன் அனுப்பியது சிபிஐ..!

22 November 2020, 12:41 pm
Shivakumar_UpdateNews360
Quick Share

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நேற்று சிபிஐயிடம் இருந்து சொத்துக் குவிப்பு முறைகேடு வழக்கு தொடர்பாக சம்மன் பெற்றுள்ளதாகவும், அவர் நவம்பர் 25’ஆம் தேதி சிபிஐ முன் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறினார்.

“நவம்பர் 19 அன்று சிபிஐ சம்மன் அனுப்பியது உண்மைதான். சிபிஐ அதிகாரிகள் எனது வீட்டிற்கு சம்மன் அனுப்ப வந்திருந்தனர். ஆனால் நாங்கள் ஒரு தனிப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததால் நாங்கள் இங்கு இல்லை. அடுத்த நாள் காலை நான் வீட்டிற்கு வந்தபோது, அவர்கள் எனக்கு சம்மன் அனுப்பினர்.” என்று சிவகுமார் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நவம்பர் 23’ம் தேதி மாலை 4 மணியளவில் ஆஜராகுமாறு சிபிஐ கேட்டுக் கொண்டது. ஆனால் அந்த நாளில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் சித்தராமையாவுடன் மாஸ்கி மற்றும் பசவகாலண் சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் வேறு தேதியைக் கேட்டுள்ளேன்.

நவம்பர் 25 ஆம் தேதி சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு திரும்புவதால், அன்று மதியம் நான் ஆஜராக கேட்டுள்ளேன். மேலும் சிபிஐ அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசியுள்ளேன். அவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக சிவகுமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது ரூ 74.93 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முறைகேடான வழியில் சம்பாதித்தாக கூறப்படும் குற்றச்சாட்டில் சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது.அக்டோபர் 5’ம் தேதி சிபிஐ கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பை உட்பட 14 இடங்களில் சிவகுமார் மற்றும் அவருடன் தொடர்புடைய பிறரின் வளாகங்களில் தேடல்களை நடத்தியது.

தேடல்கள் 57 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள், வங்கி தொடர்பான தகவல்கள், கணினி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பல ஆவணங்களை மீட்டெடுக்க வழிவகுத்ததாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அப்போது சிபிஐ கூறியது.

இந்நிலையில் தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையாக, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 19

0

0