பிளாஸ்டிக் மூவர்ண தேசியக் கொடியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் : மாநில அரசுகளுக்கு அறிவுரை!!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2021, 10:21 am
Plastic Flag - Updatenews360
Quick Share

பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட மூவர்ண தேசிய கொடியை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்ககூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு கொரோனா கட்டுப்பாடுகளுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், பிளாஸ்டிக் கொடிகளுக்கு காகிதம் போல மக்கும் தன்மையில்லை என்பதோடு, பயன்பாட்டுக்கு பிறகு உரிய மரியாதையுடன் பிளாஸ்டிக் கொடிகள் அப்புறப்படுத்துவதை உறுதி செய்வதிலும் நடைமுறை சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 320

0

0