தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வதில் தயக்கம் காட்டக் கூடாது : தெலுங்கானா ஆளுநர் அறிவுறுத்தல்!!
24 January 2021, 11:22 amஆந்திரா : கொரோனா தடுப்பு மருந்து விஷயத்தில் பிரதமருக்கு உலக சுகாதார மையம் பாராட்டு தெரிவித்துள்ளதாக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பதி கோவிலில் இன்று காலை ஏழுமலையானை வழிபட்டபின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நமது விஞ்ஞானிகள் கொரோனா தொற்றை தடுக்க தேவையான தடுப்பு மருந்தை கண்டுபிடித்திப்பதற்காக உலக சுகாதார மையம் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது என்று கூறினார்.
இன்று காலை ஏழுமலையானை வழிபட்ட தமிழிசை சவுந்தரராஜனுக்கு தேவஸ்தானம் சார்பில் கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள், நினைவு பரிசுகள் ஆகியவற்றை வழங்கினர்.
தொடர்ந்து கோவிலுக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா பரவலை தடுப்பதற்கு தேவையான தடுப்பு மருந்து விஷயத்தில் நாம் சுயசார்பு நிலையை அடைந்திருக்கிறோம்.
விஞ்ஞானிகளின் அரிய முயற்சியின் காரணமாக இந்த நிலை நாட்டுக்கு கிடைத்துள்ளது. இதற்கான நான் ஏழுமலையானுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன். நமது விஞ்ஞானிகளின் சீரிய முயற்சி, பிரதமர் அவர்களுக்கு அளித்த ஆதரவு ஆகியவற்றின் காரணமாகவே இந்த நிலைமை சாத்தியமாகி உள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து விசயத்தில் சுயசார்பு நிலையை அடைந்திருக்கும் நாம், தற்போது சரியாக திட்டமிட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். இதனால் இந்தியா மட்டுமே அல்லாது சர்வதேச உலகமும் பெருமை அடைந்துள்ளது.
தடுப்பு மருந்தை எடுத்து கொள்வதில் யாரும் தயக்கம் காட்டக்கூடாது என்றும், குறிப்பாக முன் களப்பணியாளர்கள் முதலில் தடுப்பு மருந்து எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.
0
0