மருத்துவர்கள் அறிவுரைக்கு பின் ஓய்வெடுக்க கோவாவுக்கு சென்ற சோனியா காந்தி : தாயுடன் ராகுல் காந்தியும் பயணம்!!

20 November 2020, 6:59 pm
Sonia Rahul- Updatenews360
Quick Share

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஓய்வு எடுப்பதற்காக கோவா சென்றுள்ளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அண்மைக் காலமாக ஆஸ்துமா மற்றும் நுரையில் தொற்கு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்கு டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு ஒரு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் காற்று மாசு குறைவாக இருக்கும் இடத்தில் சென்று சிறிது காலம் தங்கி ஓய்வெடுக்குமாறு சோனியாகாந்திக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து சோனியா காந்தி டெல்லியில் இருந்து புறப்பட முடிவு செய்தார்.

அதன்படி சென்னை அல்லது கோவா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், தனது மகன் ராகுல் காந்தியுடன் கோவா தலைநகர் பனாஜிக்கு சோனியா காந்தி சென்றுள்ளார். இது தொடர்பாக இருவரும் கோவாவில் பயணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Views: - 15

0

0