நாளை காலை முதல் 24 மணி நேரம் : வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு:உச்சகட்ட பரபரப்பில் இந்தியா…!!

Author: Sudha
16 ஆகஸ்ட் 2024, 3:29 மணி
Quick Share

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மருத்துவர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்தில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட வேண்டும். காவல் நிலையத்தின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கான முழுப் பொறுப்பும் மருத்துவமனையின் தலைவருக்கு மட்டுமே உள்ளது” என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபரான சஞ்சய்ராயை சிபிஐ அதிகாரிகள் இன்று (ஆக. 16) மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.மேலும், ஆர்.ஜி கர் மருத்துவமனையின் 4 மருத்துவர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

அதே நேரத்தில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக, இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாளை சனிக்கிழமை காலை 6 மணி முதல், 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை, 24 மணி நேரம் மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருத்துவ சேவைகள், விபத்து சிகிச்சை பிரிவுகள் தவிர, வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு மற்றும் நவீன மருத்துவ சேவை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Kangana பிரபல பாடகருடன் காருக்குள் போதையில் தள்ளாடிய ஆளுங்கட்சி பெண் எம்பி.. வெளியான ஷாக் தகவல்!
  • Views: - 354

    0

    0