6 குட்டிகளுடன் மண்ணில் புதைந்த தாய் நாய்: அபயக்குரல் கேட்டு ஆதரவுக்கரம் நீட்டிய பொதுமக்கள்…கேரளாவில் நெகிழ்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
15 October 2021, 1:10 pm
Quick Share

பாலக்காடு : தொடர் மழையால் தன் குட்டிகளுடன் மண்ணில் புதைந்த தாய் நாயை பொதுமக்கள் ஒன்றுதிரண்ட மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருத்தலா அருகே உள்ள கப்பூர் காஞ்சிரதாணியில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இங்கு அஷ்ரப் என்பவரின் வீட்டின் அருகே மேடான பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.

latest tamil news

மண்சரிவு ஏற்பட்ட சமயத்தில் அங்கிருந்த நாய் ஒன்று தனது 6 குட்டிகளுடன் திடீரென மண்ணில் புதைந்தது. இதை யாரும் கவனிக்கவில்லை. இதில், தாய் நாயின் உடல் முழுவதும் மண்ணில் புதைந்த நிலையில் தலைப்பகுதி மட்டும் வெளியில் நீட்டிகொண்டிருந்தது.

தன்னுடன் பாசத்துடன் அமர்ந்திருந்த தன் குட்டிகள் காணாததை கண்ட நாய் பாசப்போராட்டத்துடன் இடைவிடாமல் அபய குரல் எழுப்பி மக்களை அழைத்தது. தாய் நாயின் இந்த இடைவிடாத சப்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த மக்கள் மண்ணில் புதைந்து தவித்த நாயை காப்பாற்றினர்.

தாய் நாயை மீட்ட பின்னரே, அதனுடன் 6 குட்டிகள் இருந்து தெரியவந்தது. அந்த நாயுடன் ஆறு குட்டி நாய்கள் மண்ணில் புதைந்திருப்பது தெரியவந்ததை அடுத்து குட்டிகளை காப்பாற்றும் முயற்சியில் பொதுமக்கள் இறங்கினர்.

அந்த தாய் நாய் இடைவிடாமல் அபயகுரல் எழுப்பியது தன் குட்டிகளை காப்பாற்றுவதற்காக என தெரிந்து பொதுமக்கள் கண்கலங்கினர். இதனையடுத்து, ஒன்று திரண்ட அப்பகுதி மக்கள் நீண்ட போராட்டதிற்குப் பின் மண் சரிவை அப்புறப்படுத்தி இரண்டு குட்டி நாய்களை உயிருடன் மீட்டனர்.

நான்கு நாய் குட்டிகள் மண்ணில் புதைந்து பலியானது சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 235

0

0