முன்னாள் ராணுவ வீரர்கள் பொது நிகழ்வுகளில் இதைச் செய்யக் கூடாது..! இந்திய ராணுவ தலைமை அறிவுரை..!
20 January 2021, 6:37 pmஅரசியல் பேரணிகளில் ராணுவ வீரர்கள் கலந்துகொள்வது தற்போது வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ள நிலையில், பொது விழாக்களில் முன்னாள் ராணுவ வீரர்கள் ரிப்பன் மற்றும் பதக்கங்களை அணிவது குறித்து இந்திய ராணுவம் ஆலோசனை வெளியிட்டுள்ளது.
இராணுவ விதிமுறைகளின்படி இந்த ரிப்பன்களையும் பதக்கங்களையும் வீரர்கள் அனுபவிக்கக்கூடிய இடங்களை மேற்கோள் காட்டி இராணுவத்தால் ஒரு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் பேரணிகளில் சீருடை, ரிப்பன் மற்றும் பதக்கங்களை அணிய இராணுவ விதிகள் அனுமதிக்காது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீப காலங்களில், டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் போன்ற எதிர்ப்பு பேரணிகளில் முன்னாள் படைவீரர்கள் பதக்கங்கள் மற்றும் ரிப்பன்களுடன் சீருடை அணிந்திருப்பதைக் கண்ட பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.
இதையடுத்து தற்போது இந்திய ராணுவம், ராணுவ விதிகளை முறையாகக் கடைபிடிக்குமாறு வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆலோசனை ஒன்றை வெளியிட்டுளளது.
0
0