கல்லா நிறைய வேண்டா.. மனசு நிறைஞ்சா போதும்.. ஒரு ரூபாய்க்கு இரு வகை சட்னியுடன் தோசை : 37 வருடமாக மக்கள் மனதில் பதிந்த சாவித்ரியம்மா!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2022, 2:08 pm
One Rupee Dosai- Updatenews360
Quick Share

ஒரு ரூபாய்க்கு 2 சட்னியுடன் தோசை விற்பனை செய்து வரும் சாவித்திரி அம்மாவின் சேவையை பாராட்டி நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தாடி பத்திரி பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி அம்மா. இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சாவித்திரி அம்மா 1985 முதல் தோசை வியாபாரம் செய்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் ஒரு தோசை 25 பைசாவிற்கு விற்பனை செய்துவந்த நிலையில் விலைவாசி ஏற்றத்தை அடுத்து தற்போது ஒரு தோசை 1 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். மேலும் அதற்கு இரண்டு வகையான சட்னி வழங்கி வருகிறார்.

இன்றைய நாளில் ஓட்டலில் ஒரு தோசை 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சாவித்திரி அம்மாள் ஒரு ரூபாய் தோசை அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

சமீபத்தில் ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கட்சி ராஜய்சபா உறுப்பினர் விஜய் சாய் ரெட்டி சாவித்திரி அம்மா ஒரு ரூபாய்க்கு தோசை விற்பனை செய்து வருவதை பாராட்டி ட்விட் செய்திருந்தார்.

தற்போது சாவித்ரி அம்மா ஒரு ரூபாய் தோசை சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அனைவரும் சாவித்திரி அம்மாவை பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், லாப நோக்கத்துடன் வியாபாரத்தை மேற்கொள்ளவில்லை. இந்த விலையில் விற்பனை செய்து தான் என்னுடைய இரு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தேன் மற்றும் மகனை படிக்க வைத்தேன் என கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Views: - 539

0

0