டிஆர்டிஓவின் அபியாஸ் சோதனை வெற்றி..! பாதுகாப்புத்துறையின் அடுத்த மைல்கல் சாதனை..! ராஜ்நாத் சிங் பாராட்டு..!
22 September 2020, 9:20 pmஇந்திய பாதுகாப்புத் துறையில் மற்றொரு மைல்கல் சாதனையாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இன்று அபியாஸ் எனும் அதிவேக விரிவான வான்வழி விமான இலக்கு விமான சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. ஒடிசாவின் பாலசூர் பகுதியில் இந்த விமான சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அபியாஸின் வெற்றிகரமான விமான சோதனையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட அவர், பல்வேறு ஏவுகணை அமைப்புகளை மதிப்பீடு செய்வதற்கான இலக்காக இதைப் பயன்படுத்தலாம் என்று கூறினார்.
அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ஐ.டி.ஆர் பாலசூரிலிருந்து அபியாஸ் – அதிவேக விரிவாக்கக்கூடிய வான்வழி இலக்கின் வெற்றிகரமான சோதனை மூலம் டி.ஆர்.டி.ஓ இன்று ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இது பல்வேறு ஏவுகணை அமைப்புகளை மதிப்பீடு செய்வதற்கான இலக்காக பயன்படுத்தப்படலாம். இதற்கு டி.ஆர்.டி.ஓ மற்றும் பிற பங்குதாரர்களுக்கு வாழ்த்துக்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
சோதனைகளின் போது, இரண்டு வாகனங்கள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. பல்வேறு ஏவுகணை அமைப்புகளை மதிப்பீடு செய்வதற்கான இலக்காக இந்த வாகனம் பயன்படுத்தப்படலாம்.
டி.ஆர்.டி.ஓவின் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் எஸ்டாபிளிஷ்மென்ட்’ஆல் (ஏ.டி.இ) அபியாஸ் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. மேலும் லேப்டாப் அடிப்படையிலான தரை கட்டுப்பாட்டு நிலையத்தை (ஜி.சி.எஸ்) பயன்படுத்தி இது ஏவப்படுகிறது.