போதைப் பொருள் வழக்கு : சுஷாந்தின் காதலி ரியாவுக்கு கிடைத்தது ஜாமீன்!!

7 October 2020, 1:54 pm
rhea_sushant_UpdateNews360
Quick Share

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா சக்கரபர்த்திக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், நடிகையும், காதலியுமான ரியா சக்கரபர்த்திதான் தனது மகனின் இறப்பிற்கு காரணம் என்று சுஷாந்தின் தந்தை பீகார் போலீசில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான விசாரணையின் போது, நடிகை ரியாவுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பது தெரிய வந்தது.

எனவே, சுஷாந்தின் மரணம், போதைப் பொருள் வழக்கு என சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய முகமைகள் விசாரித்து வருகின்றன. விசாரணையில், போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பாக ரியா சக்கரபர்த்தி, அவரது சகோதரர் சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

rhea_updatenews360

இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் ஜாமீன் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அனைவரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த போது, ரியா சக்கரபர்த்தி, சாமுவேல் மிராண்டா, தீபேஷ் சாவந்த் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டது. அதேவேளையில், ரியாவின் சகோதரர் ஷோவிக், அப்துல் பாசித் ஆகியோரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

Views: - 47

0

0