போதைப்பொருள் வழக்கு : ஆர்யன்கானால் சிக்கும் பிரபல பாலிவுட் இளம் நடிகை… ஷாருக்கான் வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி ரெய்டு..!!

Author: Babu Lakshmanan
21 October 2021, 1:34 pm
aryan khan - updatenews360
Quick Share

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஆர்யன்கானிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது தந்தையான பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு நடத்திய சோதனையில், போதைப் பொருட்களை பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா உள்ளிட்ட பிரபலங்களும் சிக்கினர்.

aryan khan - updatenews360

இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு 14 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது. அதன்பேரில், அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன்கான் தரப்பில் 2வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்க போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மீண்டும் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆர்யன்கானின் செல்போன் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், மும்பையில் நடிகர் ஷாருக்கான், நடிகை அனன்யா பாண்டே ஆகியோரின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையோ நடத்தி வருகின்றனர். ஆர்யன் கானின் வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தில் அனன்யா பாண்டேவின் பெயர் இடம்பெற்றிருப்பதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுளள்து.

ஏற்கனவே போதைப் பொருள் விவகாரத்தில் பல பாலிவுட் பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், தற்போது பிரபல நடிகையின் பெயர் என்சிபியின் விசாரணை பட்டியலில் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 277

0

0