போதைப் பொருள் விவகாரத்தில் மேலும் ஒரு நடிகை கைது… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

Author: Babu Lakshmanan
30 August 2021, 6:45 pm
sonia agarwal arrest - updatenews360
Quick Share

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக மேலும் ஒரு கன்னட நடிகையை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2020ம் ஆண்டு பெங்களூருவில் கன்னட சின்னத்திரை துணை நடிகை அனிகா மற்றும் அவரது கூட்டாளிகளை முகமது அனுப், ரிஜேஸ் ரவீந்திரன் ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கன்னட முன்னணி நடிகையான ராகினி திவேதி மற்றும் நடிகை சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் கலாச்சாரம் கன்னட திரையுலகில் கேன்சர் நோய் போல பரவியிருப்பது முக்கிய திரை நட்சத்திரங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, போதைப் பொருள் விவகாரம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூரு கோவிந்த்புராவில்‌, போதை பொருள்‌ விற்பனையில்‌ ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அங்கு கர்நாடக போதைப்பொருள்‌ தடுப்பு போலீசார்‌ சோதனை நடத்தியதில், நடிகை சோனியா அகர்வால் உள்பட பலரை கைது செய்துள்ளனர். அவர்களிடம்‌ இருந்து பல கோடி ரூபாய்‌ மதிப்பிலான போதைப்‌ பொருட்கள் பறிமுதல்‌ செய்யப்பட்டது. இவை, சினிமா நடிகர்‌, நடிகைகள்‌, தொழிலதிபர்கள்‌ நடத்தும்‌ விருந்து நிகழ்ச்சிக்கு சப்ளை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தாக கூறப்படுகிறது.

Views: - 305

0

0