நடிகர் அர்ஜூன் ராம்பால் காதலியிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை….!!

12 November 2020, 4:58 pm
hindi actor - updatenews360
Quick Share

மும்பை: போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடிகர் அர்ஜூன் ராம்பாலின் காதலியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இந்தி திரையுலகிற்கும் போதை பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இதேபோல முன்னணி நடிகைகள் ஷரத்தா கபூர், சாரா அலிகான், தீபிகா படுகோனே, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சினிமா தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் வீட்டில் சோதனை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தயாரிப்பாளரின் மனைவி சபீனா செய்யது அதிடியாக கைது செய்யப்பட்டார். அதனையடுத்து, கடந்த திங்கட்கிழமை பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பாலின் வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனையில், அவரது வீட்டில் இருந்து செல்போன், மடிக்கணினி போன்ற சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, நேற்று நடிகர் அர்ஜூன் ராம்பாலின் காதலி கேப்ரில்லா டிமெட்ரியாடிசுக்கு போதை பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பினர். அதன்பேரில் அவர் தென்மும்பை பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் போதை பொருள் விவகாரம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

Views: - 25

0

0